ondragstart="return false" onselectstart="return false"

February 8, 2010

ஜ-டபிளேட் (i-Tablet) : டிஜிட்டல் மன்னன் ஆப்பிளின் புதிய அறிமுகம்




நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கும் இன்றியமையாத ஒன்றே... ஆப்பிள் நிறுவனம் குறுகிய கால இடைவெளிகளில் தமது புதுப்புது தயாரிப்புக்களை வெளியிட்டு வெற்றியையும் பெறுகின்றன.

அந்த வகையில் புதிதாக ஜ-டபிளேட் (i-Tablet) எனும் தயாரிப்பை வெளியிட உள்ளது. ஜ-டபிளேட் ஆனது ஜ-போன் (i-phone)க்கு ஒப்பானது. அதாவது ஜ-போனின் அடுத்த தலைமுறை என்று கூட சொல்லலாம்.

இதன் வெளிப்பகுதியானது அலுமினியத்தால் ஆனது. பார்ப்பதற்கு சரியாக ஆப்பிளின் MacBook ஜ போல் இருக்குமாம். இதன் விலை 1000 டொலர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜ-டபிளேட் ஆனது 10.1-inch மல்டி-தொடுகை திரையையும் LTPS LCD தொழில்நுட்பத் திரை அமைப்பையும் கொண்டது.


ஜ-டபிளேட் வை–பி, புளுடூத் 2.1, 3G வலையமைப்பு, ஜி.பி.எஸ், மைக், ஸ்பீக்கர், மற்றும் யு.எஸ்.பி. இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஜ-டபிளேடை இரு வேறு வகைகளில் வெளியிடுகின்றது. ஒரு வகை வலையமைப்பு CDMA இணைப்பைக் கொண்டது. மற்றைய வகை GSM இணைப்பைக் கொண்டது.



ஜ-டபிளேட் தரமான திரை என்பதால் வீடியோக்களை மிகத் தெளிவுவாக பார்க்கலாம். ஐ–போனைப் போலவே மியூசிக் பிளேயர் இதில் இணைந்துள்ளது.
மியூசிக் ஆல்பம், பாடல், பாடியவர், பாடல் வகைகளை வகைப்படுத்திப் பார்க்க முடிகிறது.

ஜ-போன், ஜ-பாட் போய்.... இப்ப ஜ-டபிளேட்... இனி ஜ-பொட்டில் (i-Bottle) ஆக இருக்குமோ.... என்னவோ வரட்டும் சார் பார்க்கலாம்.....




No comments:

Post a Comment

Related Posts with Thumbnails