ondragstart="return false" onselectstart="return false"

December 31, 2009

கூகிள் அறிமுகப்படுத்திய Universal search தேடும் வசதி


கூகிள் இணையத்தின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கூகிள் இணையம் இறுதியாக Universal search எனும் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, நாம் அமெரிக்கா நியூயோர்க்கு(New York) போக விரும்பினால் அங்குள்ள காலநிலை நிலவரம் (Weather), flight எடுக்கக் கூடிய நேரம், எமது இலங்கை அல்லது இந்திய ரூபாயை டொலருக்கு மாற்ற தேவையான தகவல்கள் போன்ற பொதுவான தேவைகளை தேட கூகிள் புதிதாக Universal search எனும் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியது.

இந்த Universal search ஆனது காலநிலை நிலவரம் (Weather Search), உள்ளூர் வர்த்தகம் சம்பந்தமான தேடல் (Local Businesses Search), விமான பிரயாண நேரம் பற்றி அறிய (Flight Tracker Search), சமையல் சம்பந்தமான தேடல் (Cooking Conversions Search), விளையாட்டு போட்டிகளின் பெறுபேறுகள் அறிய் (Sports Scores Search), பிரதேச தொலைபேசி கோட் இலக்கம் அறியதல் (Area Codes Search), Calculator, திரைப்படங்கள் காட்சிப்படுத்தும் நேரம் அறிய (Movie Times Search) , நாணய மாற்று வீதம் பற்றி அறியதல் (Currency Conversion Search) போன்ற பல்வேறு தகவல்களை தனித்தனியாக தரக் கூடிய வகையில் Universal search அமைந்துள்ளது.

இவற்றில் சிலவற்றை தனித்தனியே நோக்கினால்......



நியூயோர்க்கின் (New York) Weather தேவையெனின் முதல் Weather என type செய்து பின் New York என type செய்து தேட வேண்டும்.





நியூயோர்க்கில் (New York) Chinese food உள்ள விடுதிகள் சம்பந்தமாக அறிய Local Businesses Search இல் முதல் New York என type செய்து பின் Chinese food என type செய்து தேட வேண்டும்.





Flight செல்லும் நேரம் சம்பந்தமாக அறிய Flight Tracker Search இல் Flight இனுடைய இலக்கத்தை type செய்து தேட வேண்டும்.


எமது இலங்கை அல்லது இந்திய ரூபாயை டொலருக்கு மாற்ற வேண்டும் என்றால் Currency Conversion Search இல் முதல் பணப் பெறுமதியை type செய்து பின் Rupees என type செய்து அதன் பின் USD (USA Dollar) type செய்து தேட வேண்டும்.



திரைப்படங்கள் காட்சிப்படுத்தும் நேரம் அறியும் தேடல் (Movie Times Search)






விளையாட்டு போட்டிகளின் பெறுபேறுகள் அறியும் தேடல் (Sports Scores Search)



கூகிளின் அடுத்த வெளியீடு என்னவாயிருக்கும்??? பார்ப்போம்....

December 19, 2009

DVD ஜ விட Blu-ray Disc ஏன் சிறந்தது? பகுதி 2


இந்த பதிவானது Blu-ray Disc பற்றிய பதிவின் இரண்டாம் பகுதியாகும். இந்த பதிவில் Blu-ray Disc இல் பயன்படுத்தக் கூடிய வீடியோ, ஓடியோ கள் பற்றியும் single-layer, dual-layer discஇல் பதிவு செய்யக்கூடிய Data,Video நேரம், அளவுகள் பற்றியும் அலசப்படுகின்றது.

இந்தப் பதிவிலும் சில ஆங்கில சொற்களை தவிர்க்க முடியாமல் உள்ளது.
மன்னிக்கவும்...


கே விசயத்துக்கு வருகின்றேன்.....

சாதாரண DVD, அதாவது DVD, DVD±R, DVD±RW, DVD-RAM கள் போலவே
Blu-ray Disc இலும் BD-ROM, BD-R, BD-RW என்னும் வகைகள் உள்ளன.

  • BD-ROM ஜ உயர் தர வீடியோக்கள் (movie), games, மென்பொருட்களை read-only format ஆக மட்டும் பயன்படுத்த முடியும்.
  • BD-R ஜ உயர் தர வீடியோக்கள்(High-Definition video), data வகை பைல்களை write பண்ண, வாசிக்க பயன்படுத்த முடியும்.
  • BD-RE ஆனது மீண்டும் மீண்டும் write (rewritable) பண்ணக் கூடிய வசதியைக் கொண்டது.
முன்னைய பதிவில் (பகுதி 1) குறிப்பிட்டது போன்று, Blu-ray Disc ஆனது ஒரு லேயர் (Single-layer disc) என்றால் 25GB உம், இரண்டு லேயர் (Dual-layer disc)
என்றால் 50GB உம் capacity கொண்டது. அது Data வகை பைல்களுக்கு( File) பொருந்தும். ஆனால், வீடியோக்களை பொருத்த வரை உயர் தர வீடியோக்கள் (High-Definition video) என்றால் 9 மணித்தியாலங்களும், சாதாரண தர வீடியோக்கள் (Standard-Definition video) என்றால் 23 மணித்தியாலங்களும் அதிகமாக சேமிக்க பண்ண முடியும்.

Blu-ray Disc இல் MPEG-2, MPEG-4 AVC, SMPTE VC-1 (Microsoft's Windows Media Video) போன்ற வீடியோ code வகைகளை பதிவு செய்யவும், playback பண்ணவும் முடியும். அதேபோல், Dolby Digital (DD), Dolby Digital Plus (DD+), Linear PCM (LPCM), Dolby TrueHD, DTS Digital Surround, DTS-HD High Resolution Audio, DTS-HD Master Audio போன்ற ஓடியோ (Audio) code வகைகளை பதிவு செய்யவும், playback பண்ணவும் முடியும்.

Blu-ray Disc இனுடைய விலையானது சாதாரண DVD க்களின் விலையை விட சற்று அதிகமாகவே உள்ளது.


இன்றைய தொழில்நுட்ப துறையானது யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் வளர்ச்சி அடைகின்றது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டியது காலத்தின் தேவையே....


December 16, 2009

Blu-ray Disc (BD) என்றால் என்ன? பகுதி 1


Blu-ray என்பதை Blu-ray Disc (BD) எனவும் அழைப்பர்கள். இது ஒரு பிரபல்யம் அடைந்து வரும் Optical குறுந்தட்டு (Disc) வகையைச் சேர்ந்தது. இதை Blu-ray Disc Association (BDA) என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது Apple, Dell, Hitachi, HP, JVC, LG, Mitsubishi, Panasonic, Pioneer, Philips, Samsung, Sharp, Sony, TDK போன்ற நிறுவனங்களும் Blu-ray Disc ஜத் தயாரித்து வெளியிடுகின்றன.

இந்த Blu-ray Disc இல் உயர் தர வீடியோக்களை (high-definition video) write, rewrite பண்ண முடிகின்றது. Blu-ray Disc ஆனது சாதாரண DVD களை விட 5 மடங்கு சேமிப்பு (capacity) செய்ய முடியும். அதானுங்க.. 25GB ஜ விட கூடிய அளவு capacity கொண்டது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் ஒரு லேயர் (Single-layer disc) என்றால் 25GBஉம் இரண்டு லேயர் (Dual-layer disc) என்றால் 50GB உம் capacity கொண்டது. இருந்தும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் Pioneer நிறுவனமானது 20 layer களைப் பயன்படுத்தி 500GB capacity கொண்ட Blu-ray Disc ஜ அறிமுகப்படுத்தியுள்ளது.

கீழே உள்ள படம் Dual-Layer Disc இனுடையது.


இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய தகவல்: சாதாரண DVD, அதாவது DVD, DVD±R, DVD±RW, DVD-RAM களில் Red Laser குறுந்தட்டை வாசிக்க(read), write பண்ணப் பயன்படுகின்றது. ஆனால் Blu-ray Disc களில் வாசிக்க(read), write பண்ண Blue-Violet Laser உபயோகிக்கப்படுகின்றது.

Red Laser & Blue-Violet Laser

தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் பார்த்தால், Blue-Violet Laser ஆனது Red Laser இன் அலைநீளத்தை (wave length) விட சிறியது. இதனால் Blu-ray Disc இல் write பண்ணும் போது மிக நெருக்கமாகவும், லேசர் focus (Laser Focus Spot) அதிகமாகவும் இருக்கும். எனவே தரம் அதிகரிகின்றது.

அடுத்த பதிவில் Blu-ray Disc இல் பயன்படுத்தக் கூடிய வீடியோ, ஓடியோ code, format கள் பற்றியும், Single-Layer, Dual-Layer Disc இல் பதிவு செய்யக்கூடிய Data,Video நேர அளவுகள், தரம் பற்றியும் பதிவிட இருக்கின்றேன்.





December 3, 2009

ஒரே பார்வையில்- மைக்ரோசாப்ட் Office, மல்டிமீடியா File Extension



நாளுக்கு நாள் ஒவ்வொரு நிறுவனமும் தத்தங்கள் மென்பொருளுக்கு ஏற்றவாறு புதிது புதிதாக File Extension களை அறிமுகப்படுத்துகின்றார்கள். உதாரணமாக மைக்ரோசாப்டின் (Microsoft) Office 2007 இனுடைய file extension யும், நொக்கியாவின் (Nokia) nfc, nfb களையம் குறிப்பிடலாம்.


இன்று மைக்ரோசாப்ட் (Microsoft) Office இனதும், மல்டிமீடியா சம்பந்தமான file extension யும் அதற்குரிய விபரிப்புடன் பதிவிடுகின்றேன். இந்தப் பதிவில் உள்ள சில file extension தெரிந்திருக்கக் கூடியதாய் இருந்தாலும், நாம் அடிக்கடி உபயோகிக்காத பல file extension களை சேர்த்துள்ளேன். அடுத்து வரும் பதிவுகளில் இணையம், ஈ-மெயில், கிரபிக்ஸ் சம்பந்தமான file extension களை பதிவிட எண்ணியுள்ளேன்.

மன்னிக்கவும்- இந்தப் பதிவை முற்று முழுதாக தமிழில் இட முடியவில்லை.

மைக்ரோசாப்ட் (Microsoft) Office சம்பந்தமான File Extension
  • accda-Microsoft Access file
  • accdb-Office Access 2007 database file format
  • doc-Microsoft Office Word document
  • docx-Microsoft Word 2007 XML based document file format
  • dotx-Word 2007 XML template file
  • kfl-Microsoft Outlook 2007 file
  • mdb-Microsoft Access database
  • mpp-Microsoft Project file
  • msg-Microsoft Office Outlook message format
  • ost-Microsoft Outlook/Inbox offline folder
  • potx-Microsoft PowerPoint 2007 XML template
  • ppt-Microsoft Office PowerPoint Presentation file format
  • pptx-PowerPoint 2007 XML Presentation
  • pub-Microsoft Publisher document
  • sldm-Microsoft PowerPoint slide file
  • sldx-Microsoft PowerPoint 2007 XML slide file
  • thmx-Microsoft PowerPoint 2007 theme file - template
  • xls-Microsoft Office Excel spreadsheet
  • xlsx-Excel 2007 XML Workbook
  • xltx-Excel 2007 XML template
  • xsf-Microsoft Office InfoPath File
  • xsn-Microsoft Office InfoPath file
மல்டிமீடியா (Multimedia) சம்பந்தமான File Extension
  • 3g2-3GPP2 multimedia file
  • 3gp-Multimedia files for wireless networks
  • 3gp2-3GPP2 multimedia file
  • 3gpp-3GPP Third generation partnership project movie
  • 3gpp2-Multimedia files for wireless networks
  • 3mm-Microsoft 3D Movie Maker video file
  • asx-Microsoft Advanced Streaming Redirector file
  • aut-Microcraft AUTHOR eLearning
  • avc-Advanced Video Coding (MPEG 4 AVC)
  • avf-Video information
  • avi-Audio Video Interleave movie
  • avr-MPEG-2 transport stream file
  • avs-Animation file, Winamp Advanced Visualization Studio file
  • awlive-Active WebCam live capture
  • az-WinDVD related file
  • bup-Backup of DVD info file
  • clpi-Blu-Ray clip AV stream file
  • crv-IPcam video format
  • ctd-Sony Click to DVD project
  • ctd-Simpsons Cartoon Studio export file
  • dat-Video CD MPEG movie MPEG1
  • div-DivX movie
  • divx-Movie Encoded with DivX-codec
  • dxr-Adobe Director protected movie file
  • f4v-Adobe Flash mp4 file
  • flv-Flash video file
  • m2p-MPEG-2 file format
  • m2s-MPEG-2 audio/video file
  • m2t-MPEG movie file
  • m4v-MPEG-4 video file format
  • mov-Apple QuickTime digital movie file
  • movie-Apple QuickTime format for digital video files
  • mp4-MPEG-4 video file format, Nero digital file
  • mpeg-MPEG movie
  • mpg-MPEG 1 video file format
  • mkv-Matroska video-audio multimedia file
  • nvc-Nero Vision Express project file
  • ppj-Adobe Premiere Pro video editing project
  • rec-Record file
  • rm-RealMedia
  • swt-Adobe Flash templatized SWF file
  • vcd-Video CD file
  • xvid-XviD Codec


December 1, 2009

மிகச் சிறிய MP3 பிளேயர்



உலகிலேயே மிகச் சிறிய MP3 பிளேயரை (Player) Japan நிறுவனமொன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் அளவு Blue-tooth handset ஜ விட சிறியது. கவலை தரும் விடயம் என்னவென்றால் ஜப்பானில் மட்டுமே தற்போது வாங்க முடியும் (only available in Japan).




ஏனைய MP3 பிளேயர்களைப் போலவே, இந்த சிறிய MP3 பிளேயரும் எல்லா
வசதிகளையும் கொண்டுள்ளது....
  • 4 GB சேமிப்பகம் (memory)
  • USB ஊடாக பாடல்கள் மாற்றக்கூடிய, சார்ஜ் செய்யக்கூடிய வசதி
  • மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய Li battery வசதி
  • Stereo ஒலி
  • மேலதிக மென்பொருள் இல்லாமல் PC இல் இருந்து பாடல்களை எந்த Operating System இல் இருந்தும் மாற்றலாம்.
பொறுத்திருங்கள் நண்பர்களே, நம்மட நாட்டு சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.

Related Posts with Thumbnails