ondragstart="return false" onselectstart="return false"

November 24, 2009

நொக்கியாவின் (Nokia) புதிய வரவு X6....





நொக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Nokia X6 ஜ வெளியிடுகின்றது. இது நொக்கியாவின் X series இல் முதலாவது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இளசுகளை நம்பியே Nokia X6 வெளியிடப்படுகின்றது..
Nokia X6 ஆனது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை (Feature) கொண்டுள்ளது...
  • 3.2 inch தொடுகை திரை (touch screen)
  • 5.0 மெகா பிக்சல் (mega pixel) கமரா
  • கமரா dual LED flasharl Zeiss lens ஜ் கொண்டுள்ளது
  • உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் (30 frames per second)
  • வீடியோ, புகைப்படத்தை (photo) எடிட்டிங் செய்ய முடியும்
  • TV Out, Stereo speakers, 3.5 mm audio jack வசதியுள்ள மல்டி மீடியா பிளேயரை (multimedia player) கொண்டுள்ளது
  • 3G, HSDPA, stereo Bluetooth and WiFi
  • இணைய உலவியானது (web browser) flash support உடையது.
  • 32 GB உள்ளக சேமிப்பு வசதி (on-board memory)



November 2, 2009

கூகிளின் புதிய அறிமுகம் Google Social Search

இன்றைய கணணி யுகத்தில் கூகிள் இணையம் நாளுக்கு நாள் புதுப்புது புரட்சியை ஏற்படுத்திக் கொண்டுருக்கின்றது. அந்த வகையில் கூகிள் இணையம் இறுதியாக Google Social Search எனும் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியது.

நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் இணைய பாவனையாளர்கள், தங்கள் உறவுகளைப் பேண ப்புளக் (Blog), சமூக இணைப்புத் தளங்களை (Social Networks- Twitter, Facebook) உபயோகிக்கின்றார்கள். அப்படியான இணையத் தேடல்களுக்கு Google Social Search மிகவும் உதவுகின்றது.

கீழே உள்ள காணொளியைப் பாருங்க... உங்களுக்கே புரியும்...........





November 1, 2009

விண்டோஸ் 7 வெற்றியில் தமிழரின் பங்கு...

மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய இயங்கு மென்பொருளான விண்டோஸ் 7 (Windows 7) ஜ உலகம் பூராகவும் வெளியிட்டது தெரிந்த ஒன்றே. சற்று தோல்வி வெளியீடான விஸ்ராக்கு (Vista) பின் விண்டோஸ் 7 அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குரிய பலனையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டுள்ளது.

இதில் நாம் பெருமைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், விண்டோஸ் 7யை உருவாக்கியதில் ஒரு தமிழ் கணிப்பொறியாளர் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 அதிகாரிகளில் 6 பேர் இந்தியர்களாம். சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவில் இந்த இந்தியர்கள் 6 பேருக்கும் மிக முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர் என்பவர்தான் சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். அந்தப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என்ற பதவியில் உள்ளார் அவர்.

சோமசேகர் தலைமையில் உலகம் முழுவதும் 4,000 பேர் பணிபுரிகிறார்கள்.
அண்மையில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான்.

சோமசேகர் அவர்களே, உங்கள் பணி மென் மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்....

Related Posts with Thumbnails