ondragstart="return false" onselectstart="return false"

March 26, 2010

Top Ten வீடியோ எடிட்டிங், DVD பிளேயர் மென்பொருள் தரவரிசை

பெரும்பாலனவர்களுக்கு டொப்ரென்ரிவியூ.கொம் (TopTenReview) இணையத்தளத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். இவ் இணையத்தள நிறுவனத்தினர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் (குறிப்பாக வருடாந்தம்) வெவ்வேறு பிரிவுகளில் மென்பொருட்களை ஆய்வு செய்து பொருத்தமான பிரிவுகளில் தரவரிசைப்படுத்துவார்கள். அந்த வகையில், இவ் இணையத்தளம் வீடியோ எடிட்டிங் மென்பொருள், DVD பிளேயர் மென்பொருள் ஆகிய பிரிவுகளின் இந்த ஆண்டுக்கான (2010) தனது டொப்ரென் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவு மென்பொருட்களின் தரவரிசையும் அதன் கடைசி வெளியீடுகளின் தரவிறக்க தொடுகைகளும்.....

[மென்பொருட்களின் பெயர்களை தமிழில் எழுத முடியாமைக்கு மன்னியுங்கள் Boss... :)]


வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்- டொப்ரென் தரவரிசை ----------------------------------------------------------------------------------


1. CyberLink PowerDirector.................................2. Corel VideoStudio Pro X3

3. Adobe Premiere Elements ..............................4. Magix Movie Edit Pro

5. Pinnacle Studio ................................................6. Sony Vegas Movie Studio Platinum

7. Roxio Creator ...................................................8. ShowBiz DVD


9. Corel DVD Movie Factory ...........................10. PowerProducer



DVD பிளேயர் மென்பொருட்கள்- டொப்ரென் தரவரிசை ---------------------------------------------------------------------------

1. PowerDVD ....................................................... 2. WinDVD

3. BlazeDVD...........................................................4. Zoom Player

5. CinePlayer ........................................................6. TotalMedia Theatre

7. DVD X Player ...................................................8. RioDVD Region Free Player

9. DirectDVD .....................................................10. SuperDVD Player



அடுத்துவரும் பதிவுகளில் அன்ரி வைரஸ் (Anti Virus) மென்பொருட்களின் டொப்ரென் தரவரிசையை, விரிவான பார்வையில் எதிர்பாருங்கள்....:)

இப்பதிவை PDF ஆக தரவிறக்குக



March 20, 2010

GPRS என்றால் என்ன? பகுதி-2 - துறை சார்ந்த விளக்கம்

GPRS பற்றிய பகுதி 1 இல் "குறியீட்டுத்தகவல்கள் குறைத்தல்" அதாவது இணைய வேகத்தினை எவ்வாறு அதிகரிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதன் மிகுதி இன்றைய பதிவில் அலசப்படுகின்றது.

செல்பேசிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளை வழங்கி அதன் இணைய வேகத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். பொதுவாக பேச்சுத்தடத்திற்கு ஒரு நேரத்துண்டு போதுமானது . குறிப்பிட்ட தரவு அனுப்ப சற்றே அதிக அளவு பட்டை (bandwidth) தேவைப்படும். எனவே, ஒரு தள நிலையத்தில், ஒரு குறித்த நேரத்தில் உள்ள எட்டு நேரத்துண்டுகளில் ( தற்போது பேசுவதற்கு பயன்படும்நேரத்துண்டுகள் தவிர) எஞ்சியுள்ள நேரத்துண்டுகளை ஒரே செல்பேசிக்கு வழங்கலாம். அதிக பட்சம் ஒரு நேரத்துண்டில் நொடிக்கு (குறியீட்டு தகவல்களை ஒதுக்கி ) 21.4 KBits வரை அனுப்பலாம் (பகுதி 1 இல் ஆராயப்பட்டது).

ஒரே நேரத்தில்
  • இரு நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு வழங்கினால் 2X21.4= 42.8 KBits அளவு தரவு அனுப்பலாம்.
  • மூன்று நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு ஒதுக்கித்தரவு அனுப்பினால் 3X21.4=64.2 KBits தரவுப் பரிமாற முடியும்.
இப்படி ஒரு நேரத்தில் உள்ள எட்டு நேரத்துண்டுகளையும் ஒரே செல்பேசிக்கு வழங்கிப் பின் தரவுப் பரிமாற்றம் செய்தால் 8X21.4=171.2 KBits வேகத்தில் இணைய வேகம் ஏற்படுத்திக்கொடுக்கலாம். 170 KBits என்பது உண்மையிலேயே சற்று வேகமான இணைய இணைப்பு. ஆனால் ஒரே நேரத்தில் எட்டு நேரத்துண்டுகளையும் ஒரு செல்பேசிக்கு வழங்குவது செயல்முறையாய் இயலாத காரியம் (ஒரு நேரத்தில் எல்லா நேரத்துண்டுகளும் பயன்படுத்தப்படாமல் இருப்பதில்லை ). எனினும் , கோட்பாட்டுப்படி (theoretically), GPRS இன் வேகம் 171.2 KBits எனக்கொள்ளலாம்.

இந்த GPRS சேவையின் சிறப்புக்களைச் சுருங்கக்கூறின்,

  1. இணைய இணைப்பின் வேக அதிகரிப்பு.
  2. இணைப்பு இருக்கும் நேரம் வரை கட்டணம் வசூலிப்பது போய், எவ்வளவு தரவு அனுப்பப்பட்டுள்ளதோ அதற்கேற்றாற்போல் கட்டணம் (Volume based Billing).
  3. வலையமைப்பிலுள்ள வானலை வளத்தை (Radio Resource), அதாவது ஒலிபரப்பியின் பயன்பாட்டை அதிகரித்து , சரியான விதத்தில் பயன்படுத்தி நிறையப் பயன்களைப் பெறுதல்.
  4. செல்பேசி, இணைய இணைப்பு ஏற்படுத்த எடுத்துக்கொள்ளும் காலத்தை வெகுவாய்க் குறைத்தல்.

GPRS உருவாக்கம் பற்றிய சில தகவல்கள்....


இந்த GPRS சேவைக்கான வரன்முறைகள் (Specifications) 2.5G இல் வகுக்கப்பட்டன. முதல் முதலாக 2001-ல் GPRS வசதி கொண்ட செல்பேசியை எரிக்ஸன் அறிமுகப்படுத்தியது.

செல்பேசிகளை GPRS சேவை வழங்குவதன் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
  • வகை A: இவ்வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி ஒரே நேரத்தில் பேசவும் இணையத்தில் உலவி, தரவுப்பரிமாற்றமும் செய்ய இயலும். ஆனால் இவ்வகையை நடைமுறைப்படுத்த முயன்றால் செல்பேசியைத் தயாரிப்பதில் சிக்கல்களும், அதிக செலவும் ஏற்படும் . எனவே இவை பரவலாக உபயோகத்தில் இல்லை.
  • வகை B: இவ்வகைச் செல்பேசிகளைப் பயன்படுத்தி ஒரு நேரத்தில் பேசவோ அல்லது தரவுப்பரிமாற்றம் செய்யவோ மட்டும் முடியும் . இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய இயலாது. தரவுப் பரிமாற்றம் நிகழ்கையில் அழைப்பு ஏற்படும் போது... அழைப்பை ஏற்றுக்கொண்டு தகவல் பரிமாற்றத்தினை ஒத்தி வைக்கலாம். அழைப்பு முடிந்ததும் மீண்டும் தரவுப் பரிமாற்றத்தினைத் தொடரலாம். இந்த வகை-B ச் செல்பேசிகளே தற்போது சந்தையில் அதிகம் இருக்கின்றன.
  • வகை C: இந்த வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி தரவுப்பரிமாற்றம் மட்டும் செய்ய முடியும் . அழைப்பிற்குப் பயன்படுத்த முடியாது. தரவுப்பரிமாற்றத்திற்கு மட்டும் இவ்வகையான செல்பேசிகள் வடிவமைக்கப்பட்டதால் தற்போது இவ்வகைச் செல்பேசிகள் உபயோகத்தில் இல்லை.

உங்கள் செல்பேசியில் GPRS சேவை ஏற்ப்படுத்துதல்...


GPRS சேவையைப் பயன்படுத்தி இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொண்டவுடன் ஒரு முகவரி (IP address) உங்கள் செல்பேசிக்கு வழங்கப்படும். இவ் முகவரியானது ஒவ்வொரு முறை இணையம் இணைக்கும் போதும் மாறிக்கொண்டே (Dynamic) இருக்கும். உங்கள் செல்பேசியில் GPRS வசதி இருந்தாலும், இச்சேவையினை உங்களது சேவை வழங்குநர் (Service Provider-Hutch, Airtel, Dialog) தான் ஏற்படுத்தித் தரவேண்டும். ஒவ்வொரு சேவையாளரின் வலையமைப்பிலுள்ள GPRS சேவையை ஏற்படுத்த உங்கள் வழங்குநர் தரும் அமைப்புத் தகவல்களை (Settings) உங்கள் செல்பேசியில் உள்ளீடு செய்தல் அவசியம். இந்த அமைப்புத் தகவல்கள் செல்பேசிக்கு செல்பேசி வேறுபடும். உங்கள் செல்பேசியில் அமைப்பு அல்லது இணைய வசதியை ஏற்படுத்தி தரும் பட்டியைச் (GPRS settings) சுட்டி இந்தத் தகவல்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். இந்த அமைப்புகளில் முக்கியமானது அணுகு புள்ளி ( Access Point Node-APN) எனப்படும் . அதாவது, ஒரு சேவையாளரின் வலையமைப்பிலிருந்து இணையத்திற்கு இணைக்கையில், எந்த நுழைவாயின் மூலம் இணைப்பது என்பதைக் குறிப்பதே இந்த APN ஆகும். ஒரே வலையமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட APN உம் இருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், கோட்பாட்டுப்படி170 KBits வேகம் என்று சொன்னாலும் நடைமுறையில் அண்ணளவாக 56 KBits (56-114 kbit/s) வேகம் வரை தான் GPRS சேவையை பெற முடியும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.... மறக்காமல் ஓட்டை குத்தி விடுங்கோ....

இப்பதிவை PDF ஆக தரவிறக்குக





March 10, 2010

3D TV உம் வந்தாச்சு.....இனி ஜாலி தான்...

அவாதார் 3டி இல் வந்து கலக்கிய கலக்கு நினைவிருக்கலாம். அத்தகைய திரைப்படங்களை வீட்டில் பார்க்க முடியாதா எனப் பல பேர் ஏங்கினார்கள் (நானும் ஒருவன்). அந்த ஆசையை நீக்க சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் தயாரித்துள்ள 3 டி தொலைக்காட்சிப் பெட்டி ஒரு புதிய புரட்சிகர தயாரிப்பாக அடுத்த வாரம் (3 வது கிழமை மார்ச் 2010) விற்பனைக்கு வருகின்றது. பானாசோனிக் நிறுவனம் தனது முதல் 3 டி டிவியை வரும் புதன்கிழமை (24 ம் திகதி மார்ச் 2010) விற்பனைக்கு விடுகிறது.


முப்பரிமாண படங்களை இந்த 3 டி டிவிக்கள் மூலம் எ
து வீடுகளில் கண்டுகளிக்க முடியும். இந்த 3 டி டிவியானது 3 டி கண்ணாடிகள், ப்ளூ ரே பிளேயர் உள்பட 46 inch திரையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அளவில் பெரியதாகவும், ரீசார்ஜ் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் கண்ணாடிகளாகவும் இருக்குமாம். சாம்சங் நிறுவனம் இதன் விலையை 3000 டாலர்கள் என நிர்ணயித்துள்ளது. அதாவது ரூ.1.37 லட்சம் (இந்தியன் ரூபா), ரூ.3.44 லட்சம் (இலங்கை ரூபா).


நம்மட ஹாலிவுட் திரைப்படங்களான அவதார், ஷ்ரெக், அலைஸ் இன் வொன்டர்லேண்ட் ( எந்திரனும் வருதாம்...) என பெரும்பாலும் 3 டி படங்கள் வரத் தொடங்கிவிட்டதால் 3டி தொலைக்காட்சி விற்பனை உலகெங்கும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3டி இல் ஒருக்கப் பார்த்திட்டாப் போச்சு.....



March 2, 2010

விசைப்பலகையில் CPU - புதிய அறிமுகமா?

ஒன்றையும் விட்டு வைக்கமாட்டார்கள் போலிருக்கே.... ஏதோ புதிய அறிமுகம் என்கின்றார்கள்...நீங்களும் பாருங்கோ....













Related Posts with Thumbnails