ondragstart="return false" onselectstart="return false"

October 30, 2009

கூகிளில் படத்தை (Image) எவ்வாறு விரும்பிய நிறத்தில் தேடுவது

இன்றைய இணைய உலகில் எங்களின் உற்ற நண்பனாகிவிட்ட கூகிள் தேடும் பொறியில் (Google search engine), எமக்கு தேவையான படத்தை (Image) எவ்வாறு நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.

இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் சிலருக்காவது என் பதிவு உதவும் என நினைக்கிறேன்.

நீங்கள் அழகிய மஞ்சள் நிற ரோஜா பூவைத் (Yellow colour Rose) தேட வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்...

அதாவது கூகிள் பட தேடலின் (URL- Address Bar)இல் கடைசியில் &imgcolor=yellow என்று சேர்த்தால் போதும்.

அதாவது http://images.google.com/images?q=rose&imgcolor=yellow

படத்தை பாருங்க.....



October 28, 2009

பிரபல Messengers இனுடைய புதிய வரவுகள்

இன்றைய கணணி யுகத்தில் Messenger உடன் தான் சிலர் பொழுதையே கழிக்கிறார்கள். பிரபல Messenger இனுடைய புதிய வரவு (Latest Version) தரவிறக்கும் இணைய முகவரிகள் கீழே உள்ளன. அனுபவியுங்கள்..... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்....


விண்டோஸ் லைவ் மெசென்யர் (Windows Live Messenger 9)







தரவிறக்க இங்கு அழுத்துங்கள்







யாகூ
மெசென்யர் (Yahoo! Messenger 10 Beta /9.0.0.2162)




தரவிறக்க இங்கு அழுத்துங்கள்












ஸ்கைப் (Skype 4.1.0.179)






தரவிறக்க இங்கு அ ழுத்துங்கள்








கூகிள் ரோக் (Google Talk 1.0.0.105)






தரவிறக்க இங்கு அழுத்துங்கள்







Nimbuzz Messenger






தரவிறக்க இங்கு அழுத்துங்கள்







AOL Instant Messenger (AIM) 7.0.13.4




ரவிறக்கஇங்கு அழுத்துங்கள்








PalTalk 9.8




தரவிறக்க இங்கு அழுத்துங்கள்






Miranda
IM 0.9.0 Build 3 /0.8.9







தரவிறக்க இங்கு அழுத்துங்கள்









யாஹூ தனது ஜியோசிட்டிஸை மூடியது

ஜியோசிட்டிஸை (GeoCities) தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதானப்பா யாஹூ (Yahoo) நிறுவனத்தின் இலவச வெப் ஹோஸ்டிங் தளம். நம்மட தமிழில் சொன்னால் ஓசி வெப் ஹோஸ்டிங் தளம். யாஹூ நிறுவனம் ஜியோசிட்டிஸை மூடிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக யாஹூ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாட் காம் (.com) வர்த்தகம் உச்சத்தில் இருந்த போது ஜியோசிட்டிஸை 3 பில்லியன் (Billion Dollar) டாலர் கொடுத்து வாங்கியது யாஹூ. ஆனால் இந்த தளத்தையும், இலவச வெப் ஹோஸ்டிங் சேவையையும் தொடர்ந்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது.
ஆனால் புதியதொரு கட்டண வெப் ஹோஸ்டிங் திட்டத்தை துவக்கியுள்ள யாஹூ, ஆரம்ப கட்டச் சலுகையாக ஒரு வருடத்துக்கு 5 டாலர் (Dollar) மட்டுமே என இப்போது அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் தனது நிறுவன பல்வேறுபட்ட செலவுகளைக் குறைத்துக் கொண்ட யாஹூ, அதன் பலனாக மூன்று மடங்கு இலாம் ஈட்டியதாகக் கணக்கு காட்டியது. எனவே இதே வழியை மேலும் சில வருடங்களுக்கு பின்பற்றும் திட்டத்தில் உள்ளது யாஹூ. அதன் விளைவுதான் இந்த ஜியோசிட்டிஸ் சேவை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இணைய தளம் அமைக்க வேண்டுமென்றால் பெரிய அளவு பணம் செலவாகுமோ என்று பலரும் தயங்கிய போது, யார் வேண்டுமானாலும் சொந்தமாக இணையதளத்தை அமைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் யாஹூ ஜியோசிட்டிஸ் மூடப்பட்ட அறிவிப்பு இணையத் தள உலகில் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.

October 24, 2009

2009 இல் பெரிய இணைய நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறுகள்

ஆணைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்... அதே போல் தற்போதைய கணணி யுகத்தில் மிகப் பெரிய சில இணைய நிறுவனங்கள், தங்கள் இணையங்களில் ஏற்பட்ட கோளாறால் பெரிய பிரச்சனைகளை எதிர்நோக்கின.


அமெசொன்.கொம் (Amazon.com) ஜ் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 19ம் திகதி ஆடி மாதம் 2009 அன்று அமெசொன்.கொம் இன் இணையத்தை குறித்த மணித்தியாலங்கள் நுகர்வோர் பார்க்க முடியாமல் இருந்தது. இதனால் அமெசொன்.கொம் க்கு பல கோடி நட்டம் ஏற்பட்டது.





Rackspace என்பது மிகப் பெரிய web hosting நிறுவனம். ஆனி மாதம் 2009 அன்று இவர்களது இணைய சேவை 45 நிமிடங்கள் offline க்கு சென்றது. இதனால் Twitter க்கும் தங்கள் சேவையை வழங்க முடியாமல் திண்டாடியது. எங்கள் பலராலும் பயன்படுத்தும் Twitter உம் Rackspace இடம் இருந்தே செய்திகள் மற்றும் சில இணைய சேவைகளை பெறுகின்றது.


விக்கிபிடியாவை (Wikipedia) தெரியாதவர்கள் இருக்க முடியாது. விக்கிபிடியா ஒரே பிரச்சனையை 31ம் திகதி ஆடி மாதம் 2009 இரண்டு மணித்தியாலங்கள் எதிர்நோக்கியது. இதனால் விக்கிபிடியாவும் அதனுடன் சேர்ந்தவையும் இயங்க முடியாமல் போனது.


இதே போல் ஜீமெயிலும் (Gmail) 1ம் திகதி புரட்டாதி மாதம் 2009 இயங்க முடியாமல் பிரச்சனையை எதிர்நோக்கியது. மில்லியன் பயனாளர்கள் ஜீமெயிலை பயன்படுத்த முடியாமல் தவிர்த்தார்கள்.



October 23, 2009

விண்டோஸ் - 7 விலை வெளியிடப்பட்டுள்ளது

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள தனது புதிய வெளியீடான அதிவேக இயங்கு மென்பொருள் விண்டோஸ் 7 (Windows 7) இன் விலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விண்டோல்-7 விலை (இந்திய ரூபாயில்):

விண்டோஸ் -7 ஹோம் பேஸிக் (Home Basic)- ரூ.5,899
விண்டோஸ் -7 ஹோம் ப்ரீமியம் (Home Premium)- ரூ.6799
விண்டோஸ் -7 புரொபஷனல் (Professional)- ரூ. 11,199
விண்டோஸ் -7 அல்டிமேட் (Ultimate)- 11,799

விண்டோஸ் 7 அறிமுகமாவதற்கு முன்பே விண்டோஸ் 7-க்கு எதிர்பார்ப்புகளும், ஆர்டர்களும் குவிந்து விட்டதாகத் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். விஸ்டா மூலம் ஏற்பட்ட சரிவை விண்டோஸ் 7 இருமடங்கு சரி செய்துவிடும் என நம்புவதாகக் மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

விண்டோஸ் 7 ஜ வெளியிட்டது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நேற்று (Oct 22, 2009) தனது புதிய வெளியீடான விண்டோஸ் 7 (Windows 7) ஜ அமெரிக்கா நியூயோர்க் நகரில் வெளியிட்டது. சற்று தோல்வி வெளியீடான விஸ்ராக்கு (Vista) பின் விண்டோஸ் 7 அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே....

அமெரிக்கா நியூயோர்க் நகரில் நடந்த வெளியீட்டு விழா புகைப்படங்கள்.....












October 22, 2009

மொஸில்லா பயபொக்ஸ் 3.6 வெளிவருகின்றது..

இணைய உலாவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த கணணி யுகத்தில், மொஸில்லா பயபொக்ஸின் பங்கு சற்று கூடுதலாகத் தான் இருக்கிறது. தற்போது மொஸில்லா பயபொக்ஸ் 3.6 வெளிவர இருக்கின்றது.



பயபொக்ஸ் 3.5 உடன் ஒப்பிடும் போது பயபொக்ஸ் 3.6 சிறிய updates உடன் தான் வர இருக்கின்றது. மிகச் சிறந்த உலாவும் வேகத்துடனும் (Browsing Speed), புரோக்கிறம் ஆரம்ப நேரமும் (Start-up Time) மிகக் குறைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல், Add-ons யும் themes யும் install பண்ணிய பின் பயபொக்ஸை மீண்டும் ஆரம்பிக்க (Restart) தேவையில்லை. இன்னும் பல updates உடன் வெளிவருகின்றது. இவ்வாறு அதிகரித்துச் செல்லும் பயபொக்ஸின் வளர்ச்சி, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பயபொக்ஸ் 4.0 வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.



Related Posts with Thumbnails