ondragstart="return false" onselectstart="return false"
Showing posts with label ஈ-மெயில். Show all posts
Showing posts with label ஈ-மெயில். Show all posts

October 28, 2009

யாஹூ தனது ஜியோசிட்டிஸை மூடியது

ஜியோசிட்டிஸை (GeoCities) தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதானப்பா யாஹூ (Yahoo) நிறுவனத்தின் இலவச வெப் ஹோஸ்டிங் தளம். நம்மட தமிழில் சொன்னால் ஓசி வெப் ஹோஸ்டிங் தளம். யாஹூ நிறுவனம் ஜியோசிட்டிஸை மூடிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக யாஹூ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாட் காம் (.com) வர்த்தகம் உச்சத்தில் இருந்த போது ஜியோசிட்டிஸை 3 பில்லியன் (Billion Dollar) டாலர் கொடுத்து வாங்கியது யாஹூ. ஆனால் இந்த தளத்தையும், இலவச வெப் ஹோஸ்டிங் சேவையையும் தொடர்ந்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது.
ஆனால் புதியதொரு கட்டண வெப் ஹோஸ்டிங் திட்டத்தை துவக்கியுள்ள யாஹூ, ஆரம்ப கட்டச் சலுகையாக ஒரு வருடத்துக்கு 5 டாலர் (Dollar) மட்டுமே என இப்போது அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் தனது நிறுவன பல்வேறுபட்ட செலவுகளைக் குறைத்துக் கொண்ட யாஹூ, அதன் பலனாக மூன்று மடங்கு இலாம் ஈட்டியதாகக் கணக்கு காட்டியது. எனவே இதே வழியை மேலும் சில வருடங்களுக்கு பின்பற்றும் திட்டத்தில் உள்ளது யாஹூ. அதன் விளைவுதான் இந்த ஜியோசிட்டிஸ் சேவை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இணைய தளம் அமைக்க வேண்டுமென்றால் பெரிய அளவு பணம் செலவாகுமோ என்று பலரும் தயங்கிய போது, யார் வேண்டுமானாலும் சொந்தமாக இணையதளத்தை அமைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் யாஹூ ஜியோசிட்டிஸ் மூடப்பட்ட அறிவிப்பு இணையத் தள உலகில் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.

Related Posts with Thumbnails