







New Technology News in Tamil








கூகுள் இணையத்தின் இணையப் புரட்சியை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் இணையமானது நாளுக்கு நாள் புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. இதனால், பிரச்சனை என்னவெனில்.. கூகுள் இணையத்தின் வளர்ச்சிக்கேற்ப இணைய உலவிகளின் வசதிகளும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமே....
அந்த வகையில் எக்ஸ்புளோரர்-6 (Internet Explorer 6) தற்போது பிரச்சனையை எதிர்நோக்கின்றது. கூகுள் இணையத்தின் வளர்ச்சிக்கேற்ப எக்ஸ்புளோரர்-6 ஆல் ஈடுகொடுக்க முடியவில்லை. எக்ஸ்புளோரின் 7, 8 வெளியீடுகளைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் எக்ஸ்புளோரர் 7, 8 கூகுள் இணையக்கு தேவையான வசதிகளை கொண்டுள்ளது.
கூகுள் இணையமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 பிரவுசருக்கு இந்த ஆண்டுக்குள் (2010) Good Bye சொல்கிறது. அதாவது, இனி வரும் காலங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-7, பயபொக்ஸ் 3.xx, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதற்கு மேம்பட்ட உலவிகள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் உலவிகளாக தொடரும்.
கூகுள் Documents மற்றும் கூகுள் இணையதளங்கள் 2010ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 (பழைய வெளியீடுக்கும் இது பொருந்தும்) உலவியில் சரிவர செயல்படாது.இந்த ஆண்டின் பிற் பகுதியில், கூகுள் மெயில் மற்றும் கூகுள் கலண்டர் ஆகியவற்றுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 உலவி செயல்படாது. அடுத்த வாரம் முதல் பழைய உலவிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் Documents மற்றும் கூகுள் இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகும். அதில், மேம்பட்ட வெர்சன்களுக்கு மாறிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும். மேலும் மார்ச் 1ம் தேதிக்கு முன்பும் ஒரு ரிமைன்டர் கொடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










