December 16, 2009
Blu-ray Disc (BD) என்றால் என்ன? பகுதி 1
Blu-ray என்பதை Blu-ray Disc (BD) எனவும் அழைப்பர்கள். இது ஒரு பிரபல்யம் அடைந்து வரும் Optical குறுந்தட்டு (Disc) வகையைச் சேர்ந்தது. இதை Blu-ray Disc Association (BDA) என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது Apple, Dell, Hitachi, HP, JVC, LG, Mitsubishi, Panasonic, Pioneer, Philips, Samsung, Sharp, Sony, TDK போன்ற நிறுவனங்களும் Blu-ray Disc ஜத் தயாரித்து வெளியிடுகின்றன.
இந்த Blu-ray Disc இல் உயர் தர வீடியோக்களை (high-definition video) write, rewrite பண்ண முடிகின்றது. Blu-ray Disc ஆனது சாதாரண DVD களை விட 5 மடங்கு சேமிப்பு (capacity) செய்ய முடியும். அதானுங்க.. 25GB ஜ விட கூடிய அளவு capacity கொண்டது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் ஒரு லேயர் (Single-layer disc) என்றால் 25GBஉம் இரண்டு லேயர் (Dual-layer disc) என்றால் 50GB உம் capacity கொண்டது. இருந்தும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் Pioneer நிறுவனமானது 20 layer களைப் பயன்படுத்தி 500GB capacity கொண்ட Blu-ray Disc ஜ அறிமுகப்படுத்தியுள்ளது.
கீழே உள்ள படம் Dual-Layer Disc இனுடையது.
இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய தகவல்: சாதாரண DVD, அதாவது DVD, DVD±R, DVD±RW, DVD-RAM களில் Red Laser குறுந்தட்டை வாசிக்க(read), write பண்ணப் பயன்படுகின்றது. ஆனால் Blu-ray Disc களில் வாசிக்க(read), write பண்ண Blue-Violet Laser உபயோகிக்கப்படுகின்றது.
தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் பார்த்தால், Blue-Violet Laser ஆனது Red Laser இன் அலைநீளத்தை (wave length) விட சிறியது. இதனால் Blu-ray Disc இல் write பண்ணும் போது மிக நெருக்கமாகவும், லேசர் focus (Laser Focus Spot) அதிகமாகவும் இருக்கும். எனவே தரம் அதிகரிகின்றது.
அடுத்த பதிவில் Blu-ray Disc இல் பயன்படுத்தக் கூடிய வீடியோ, ஓடியோ code, format கள் பற்றியும், Single-Layer, Dual-Layer Disc இல் பதிவு செய்யக்கூடிய Data,Video நேர அளவுகள், தரம் பற்றியும் பதிவிட இருக்கின்றேன்.
Labels:
ஓடியோ,
கணணி,
குறுந்தட்டு,
வீடியோ
11 comments:
தேங்க் யூ
வரவுக்கு நன்றி அண்ணாமலையான்...
THANK YOU BY ROYAN
வருகை தந்தமைக்கு நன்றி றோயன்..
good one. thanks.
by the way, if possible please take off the word verification.
வருங்காலத் தொழில்நுட்பச் செய்தி, நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
--
நித்யா
@Thekkikattan
//if possible please take off the word verification//
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி. இனி வரும் பதிவுகளில் இவ்வாறான பிழைகளை குறைப்பேன்.
நன்றி.
நித்யா..
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
thanks for the good post...
welcome.
வருகைக்கு மிக்க நன்றி மகா...
Post a Comment