ondragstart="return false" onselectstart="return false"

December 31, 2009

கூகிள் அறிமுகப்படுத்திய Universal search தேடும் வசதி


கூகிள் இணையத்தின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கூகிள் இணையம் இறுதியாக Universal search எனும் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, நாம் அமெரிக்கா நியூயோர்க்கு(New York) போக விரும்பினால் அங்குள்ள காலநிலை நிலவரம் (Weather), flight எடுக்கக் கூடிய நேரம், எமது இலங்கை அல்லது இந்திய ரூபாயை டொலருக்கு மாற்ற தேவையான தகவல்கள் போன்ற பொதுவான தேவைகளை தேட கூகிள் புதிதாக Universal search எனும் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியது.

இந்த Universal search ஆனது காலநிலை நிலவரம் (Weather Search), உள்ளூர் வர்த்தகம் சம்பந்தமான தேடல் (Local Businesses Search), விமான பிரயாண நேரம் பற்றி அறிய (Flight Tracker Search), சமையல் சம்பந்தமான தேடல் (Cooking Conversions Search), விளையாட்டு போட்டிகளின் பெறுபேறுகள் அறிய் (Sports Scores Search), பிரதேச தொலைபேசி கோட் இலக்கம் அறியதல் (Area Codes Search), Calculator, திரைப்படங்கள் காட்சிப்படுத்தும் நேரம் அறிய (Movie Times Search) , நாணய மாற்று வீதம் பற்றி அறியதல் (Currency Conversion Search) போன்ற பல்வேறு தகவல்களை தனித்தனியாக தரக் கூடிய வகையில் Universal search அமைந்துள்ளது.

இவற்றில் சிலவற்றை தனித்தனியே நோக்கினால்......



நியூயோர்க்கின் (New York) Weather தேவையெனின் முதல் Weather என type செய்து பின் New York என type செய்து தேட வேண்டும்.





நியூயோர்க்கில் (New York) Chinese food உள்ள விடுதிகள் சம்பந்தமாக அறிய Local Businesses Search இல் முதல் New York என type செய்து பின் Chinese food என type செய்து தேட வேண்டும்.





Flight செல்லும் நேரம் சம்பந்தமாக அறிய Flight Tracker Search இல் Flight இனுடைய இலக்கத்தை type செய்து தேட வேண்டும்.


எமது இலங்கை அல்லது இந்திய ரூபாயை டொலருக்கு மாற்ற வேண்டும் என்றால் Currency Conversion Search இல் முதல் பணப் பெறுமதியை type செய்து பின் Rupees என type செய்து அதன் பின் USD (USA Dollar) type செய்து தேட வேண்டும்.



திரைப்படங்கள் காட்சிப்படுத்தும் நேரம் அறியும் தேடல் (Movie Times Search)






விளையாட்டு போட்டிகளின் பெறுபேறுகள் அறியும் தேடல் (Sports Scores Search)



கூகிளின் அடுத்த வெளியீடு என்னவாயிருக்கும்??? பார்ப்போம்....

2 comments:

சிவாஜி சங்கர் said...

ohh gud :)

Varma said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சிவாஜி சங்கர்...

Post a Comment

Related Posts with Thumbnails