ondragstart="return false" onselectstart="return false"

April 22, 2010

Private Browsing என்றால் என்ன??? ஓர் விரிவான அலசல்

இரகசியம்.. இரகசியம்.. இரகசியம்..
இது தான் சார் Private Browsing...
புரியவில்லையா???

நம்மில் பலர் வீட்டில்.. ஒரு கணணியினை வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் பயன்படுத்துவார்கள். இப்படி இருக்கையில், நாம் இணையத்தை பயன்படுத்தும் போது எந்த இணைய உலவியும் நாம் தேடும் விடயங்கள், கடவுச்சொல், தரவிறக்கப்பட்ட தகவல்கள், குக்கீஸ், உலவிய பக்கங்கள் என்பவற்றை தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும். (உங்களுக்கு தெரிந்த விடயம் தான்). வீட்டில் இருக்கும் மற்றவர்கள் நாம் சென்ற, எமது தகவல்களை எல்லாம் பார்க்க முடியும்.

இவற்றை எவ்வாறு தடுப்பது??? இதைத்தான் Private Browsing செய்கின்றது.

Private Browsing செய்ய, முதலில் இணைய உலவியில் Private Browsing வசதியை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக பயபொக்ஸை எடுத்தால் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு Private Browsing ஜ தொடக்க வேண்டும்.



இம் முறையானது இணைய உலவிக்கு இணைய உலவி வித்தியாசப்படும். Private Browsing ஜ தொடக்கிய பின் பயபொக்ஸின் திரை கீழ் உள்ளவாறு தோன்றும்.


இப்போது உங்கள் இணைய உலவியில் என்னவேனும் என்றாலும் செய்யலாம். அதாவது, இணைய உலவியானது நாம் தேடும் விடயங்கள், கடவுச்சொல், தரவிறக்கப்பட்ட தகவல்கள், குக்கீஸ், நாம் உலவிய பக்கங்கள் என்பவற்றை தன்னகத்தே சேமிக்காது. உங்கள் இணைய உலவு முடிந்த பின் Private Browsing ஜ கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு நிறுத்த வேண்டும்.


இப்போது இணைய உலவியானது சாதாரண திரைக்கு வந்து விடும்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், நீங்கள் இணைய உலவியை திறக்கும் போது எப்போதும் Private Browsing இல் இருக்கும் படியும் செய்ய முடியும். அதற்கு கீழ் உள்ள படத்தில் காட்டிய முறையை பின் பற்றுங்கள்….

Private Browsing என்னும் பதம் வெவ்வேறு இணைய உலவிகள் வெவ்வேறு பதங்களை உபயோகிக்கின்றார்கள்.
  • இன்ரநெற் எக்ஸ்பிளோவர் ஆனது InPrivate எனவும் (Internet Explorer 8 தான் இந்த வசதி உள்ளது),

  • கூகிள் குரோம் ஆனது Incognito எனவும்,
  • பயபொக்ஸ் ஆனது Private Browsing எனவும்

உபயோகிக்கின்றன.


இனி உங்க வசதிப்படி பயன்படுத்துங்கள்....:)


இப்பதிவை PDF ஆக தரவிறக்குக



5 comments:

நீச்சல்காரன் said...

நல்ல தகவல் தொகுப்பு

[[It would be more flexible to comment, if there is no word verification option in the site.]]

cheena (சீனா) said...

அன்பின் கிரிவர்ணன்'

இப்படி எல்லாம் வசதி இருக்கிறதா - பரவாய் இல்லையே - தெரியாமல் போயிற்றே - பயன படுத்திடுவோம்

நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வேர்டு வெரிஃபிகேஷனைத் தவிர்க்கலாமே ! மறு மொழி இடுபவர்கள் எரிச்சலடைவார்கள் - தவிருங்கள்

Varma said...

தற்போது வேர்ட் வெரிபிக்கேசனை நிறுத்தியுள்ளேன்.. சிரமம் ஏற்பட்டிருப்பின் மன்னியுங்கள் நண்பர்களே...

நீச்சல்காரன், சீனா,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.....

அன்பின் சீனா, உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்....

Robin said...

Useful info.
Thanks.

Post a Comment

Related Posts with Thumbnails