
செல்பேசிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளை வழங்கி அதன் இணைய வேகத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். பொதுவாக பேச்சுத்தடத்திற்கு ஒரு நேரத்துண்டு போதுமானது . குறிப்பிட்ட தரவு அனுப்ப சற்றே அதிக அளவு பட்டை (bandwidth) தேவைப்படும். எனவே, ஒரு தள நிலையத்தில், ஒரு குறித்த நேரத்தில் உள்ள எட்டு நேரத்துண்டுகளில் ( தற்போது பேசுவதற்கு பயன்படும்நேரத்துண்டுகள் தவிர) எஞ்சியுள்ள நேரத்துண்டுகளை ஒரே செல்பேசிக்கு வழங்கலாம். அதிக பட்சம் ஒரு நேரத்துண்டில் நொடிக்கு (குறியீட்டு தகவல்களை ஒதுக்கி ) 21.4 KBits வரை அனுப்பலாம் (பகுதி 1 இல் ஆராயப்பட்டது).
ஒரே நேரத்தில்
- இரு நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு வழங்கினால் 2X21.4= 42.8 KBits அளவு தரவு அனுப்பலாம்.
- மூன்று நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு ஒதுக்கித்தரவு அனுப்பினால் 3X21.4=64.2 KBits தரவுப் பரிமாற முடியும்.
இந்த GPRS சேவையின் சிறப்புக்களைச் சுருங்கக்கூறின்,
- இணைய இணைப்பின் வேக அதிகரிப்பு.
- இணைப்பு இருக்கும் நேரம் வரை கட்டணம் வசூலிப்பது போய், எவ்வளவு தரவு அனுப்பப்பட்டுள்ளதோ அதற்கேற்றாற்போல் கட்டணம் (Volume based Billing).
- வலையமைப்பிலுள்ள வானலை வளத்தை (Radio Resource), அதாவது ஒலிபரப்பியின் பயன்பாட்டை அதிகரித்து , சரியான விதத்தில் பயன்படுத்தி நிறையப் பயன்களைப் பெறுதல்.
- செல்பேசி, இணைய இணைப்பு ஏற்படுத்த எடுத்துக்கொள்ளும் காலத்தை வெகுவாய்க் குறைத்தல்.
GPRS உருவாக்கம் பற்றிய சில தகவல்கள்....

இந்த GPRS சேவைக்கான வரன்முறைகள் (Specifications) 2.5G இல் வகுக்கப்பட்டன. முதல் முதலாக 2001-ல் GPRS வசதி கொண்ட செல்பேசியை எரிக்ஸன் அறிமுகப்படுத்தியது.
செல்பேசிகளை GPRS சேவை வழங்குவதன் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- வகை A: இவ்வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி ஒரே நேரத்தில் பேசவும் இணையத்தில் உலவி, தரவுப்பரிமாற்றமும் செய்ய இயலும். ஆனால் இவ்வகையை நடைமுறைப்படுத்த முயன்றால் செல்பேசியைத் தயாரிப்பதில் சிக்கல்களும், அதிக செலவும் ஏற்படும் . எனவே இவை பரவலாக உபயோகத்தில் இல்லை.
- வகை B: இவ்வகைச் செல்பேசிகளைப் பயன்படுத்தி
ஒரு நேரத்தில் பேசவோ அல்லது தரவுப்பரிமாற்றம் செய்யவோ மட்டும் முடியும் . இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய இயலாது. தரவுப் பரிமாற்றம் நிகழ்கையில் அழைப்பு ஏற்படும் போது... அழைப்பை ஏற்றுக்கொண்டு தகவல் பரிமாற்றத்தினை ஒத்தி வைக்கலாம். அழைப்பு முடிந்ததும் மீண்டும் தரவுப் பரிமாற்றத்தினைத் தொடரலாம். இந்த வகை-B ச் செல்பேசிகளே தற்போது சந்தையில் அதிகம் இருக்கின்றன.
- வகை C: இந்த வகைச் செல்பேசிகளைப்பயன்படுத்தி தரவுப்பரிமாற்றம் மட்டும் செய்ய முடியும் . அழைப்பிற்குப் பயன்படுத்த முடியாது. தரவுப்பரிமாற்றத்திற்கு மட்டும் இவ்வகையான செல்பேசிகள் வடிவமைக்கப்பட்டதால் தற்போது இவ்வகைச் செல்பேசிகள் உபயோகத்தில் இல்லை.
உங்கள் செல்பேசியில் GPRS சேவை ஏற்ப்படுத்துதல்...
GPRS சேவையைப் பயன்படுத்தி இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொண்டவுடன் ஒரு முகவரி (IP address) உங்கள் செல்பேசிக்கு வழங்கப்படும். இவ் முகவரியானது ஒவ்வொரு முறை இணையம் இணைக்கும் போதும் மாறிக்கொண்டே (Dynamic) இருக்கும். உங்கள் செல்பேசியில் GPRS வசதி இருந்தாலும், இச்சேவையினை

எது எப்படியிருந்தாலும், கோட்பாட்டுப்படி170 KBits வேகம் என்று சொன்னாலும் நடைமுறையில் அண்ணளவாக 56 KBits (56-114 kbit/s) வேகம் வரை தான் GPRS சேவையை பெற முடியும்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.... மறக்காமல் ஓட்டை குத்தி விடுங்கோ....
இப்பதிவை PDF ஆக தரவிறக்குக
4 comments:
நல்ல பதிவு...
நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
தொடருங்கள்..
super!
கண்ணா, அருணா....
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
அருமையான தகவல்கள், நன்றிகள்..
நீங்கள் தெரிவித்துள்ள "வகை C " கருவி யை பயன் படுத்தி தான் இணையத்தில் உலவி கொண்டிருக்கிறேன், அந்த கருவி தயாரிப்பாளர் அது 4 Mbps வரை வேகத்தில் தகவல் இறக்கம் செய்யவல்லது என்று குருபிட்டுளனர், 4Mbps வரை வேகம் நான் உணர்ந்தது இல்லை, அனால் 3Mbps பார்த்து இருக்கிறேன் விடியற் காலை மட்டும் இருவு நேரங்களில்.
நீங்க குறிபிட்டுள்ள 56kbps லிமிட், 2G கு மட்டும் போருந்தவள்ளது என்று நினைகின்றேன், தவறென்றால் திருந்துங்கள்,
இந்த மாத இறுதியில் இந்தியா திரும்பவுள்ளேன் , இது வரை BSNL மட்டுமே 3G சேவை அளித்து வரும் நிலையில், இந்த கருவியை இந்தியா வில் பயன் படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
உங்களுக்கு இதில் ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.
Post a Comment