ondragstart="return false" onselectstart="return false"

February 23, 2010

கூகுள் 'குரோம்'- அசத்தலான ப்ரெளசர் தானா???

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் குரோம் (Google Chrome) ப்ரெளசர் வெளியிடப்பட்டு பல தரப்பட்ட வரவேற்பையும் பெற்றது உண்மையே. மற்ற ப்ரெளசர்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் குரோமில் இருப்பதால், விரைவில் இன்றைய கணணி உலகில் புரட்சி படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ப்ரெளசர் குரோம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயபொக்ஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பயபொக்ஸை கூகுள் குரோமால் முந்த முடியவில்லை என்பது அவதானிகளின் கருத்து.

இருப்பினும் கூகுள் குரோமின் அம்சங்கள் குறித்து அலச வேண்டும் என்ற ஆசையில் இப்பதிவை இடுகின்றேன்.


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், ஆப்பிள் சஃபாரி, ஓபேரா ஆகிய ப்ரெளசர்களில் இல்லாத பல அருமையான அம்சங்கள் குரோமில் உள்ளன.

1. இணையதளங்களுக்கான 'டாஸ்க் மேனேஜர்':

கூகுள் குரோமுக்குள் போன பின்னர், 'Shift+esc' கீயை அழுத்தினால், 'டாஸ்க் மேனேஜர்' திறக்கும். அதில், குரோம் ப்ரெளசரில் திறந்திருக்கும் அனைத்து இணையதளங்களின் பட்டியலும் காணப்படும்.

இதன் மூலம் பல்வேறு வகையான இணையதளங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் 'மெமரி'யின் அளவை நாம் அறிந்திட முடியும். ஏதாவது ஒரு இணையதள பக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால், டாஸ்க் மேனேஜரிலிருந்தபடியே அதை மூடவும் வசதி உண்டு.

2. விஷூவல் ப்ரெளசர் ஹிஸ்டரி (Visual Browser History):


'Ctrl+H' கீயை அழுத்தி 'ப்ரெளசர் ஹிஸ்டரி'யை திறந்து அதில் தேவைப்படும் பக்கங்களைத் தேடலாம்.

பொருத்தமான பக்கங்களைத் தேடுவதோடு, சம்பந்தப்பட்ட இணைய தள பக்கங்களின் 'தம்ப்நெய்ல்'களையும் இந்த ஆப்ஷன் நமக்குக் காட்டும்.

3. சூப்பர் க்ளீன் கன்டெக்ஸ்சுவல் மெனு (Super Clean Contextual Menu):

ஏதாவது ஒரு இணையதளத்தின் 'ஹைப்பர்லிங்கில்' ரைட் கிளிக் செய்தால், ஐந்து 'ஆப்ஷன்கள்' மட்டுமே அதில் இருக்கும். 'இமேஜ்' மீது 'ரைட் கிளிக்' செய்தால், நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இது பயர்பாக்ஸில் குழப்பமானதாக இருக்கும்.

4. அட்ரஸ் பாரிலிருந்து 'சைட்' தேடலாம்:

இது பிரில்லியன்ட் ஆன ஆப்ஷன். இணையதளத்தை தேடக் கூடிய வசதியுடன் கூடிய இணையதளத்திற்குப் போகும்போது - குரோம் அதை தானாகவே உணர்ந்து கொண்டு, அந்த தளத்தை 'அட்ரஸ் பாரில்' பதிவு செய்து விடும். அடுத்த முறை அந்த சைட்டுக்குப் போக விரும்பினால் 'அட்ரஸ் பாருக்குப்' போனால் போதும்.

5. பயன்படுத்தப்பட்ட 'மெமரி'யை அறிய..

இந்த ஆப்ஷன் மூலம் ப்ரெளசர்களில் பயன்படுத்தப்பட்ட மெமரியை அறிந்து கொள்ளலாம்.

குரோம் ப்ரெளசருக்குள் போய், ஒரு புதிய 'டேப்' (Tab) பை திறந்து, அதில் about:memory என்று டைப் செய்யவும். அப்போது ப்ரெளசருக்கு மேல், உங்களது கம்ப்யூட்டரில் எந்தெந்த ப்ரெளசர் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிய வரும். அதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கூடவே இருக்கும்.

6. தவறாக மூடிய 'வெப்சைட் டேப்'களை திறக்க..

பயர்பாக்ஸ்-3 ப்ரெளசரில் "Undo Closed Tab" ஆப்ஷன் உள்ளது. அதேபோல ஓபேராவில், Ctrl+Z கீயை அழுத்தினால் மூடிய டேப்களை திறக்கலாம்.

குரோமில், Ctrl+T கீயை அழுத்த வேண்டும். அப்போது, Recently closed tabs என்ற ஆப்ஷன் வரும். அதில் போய் எந்த டேப் தவறுதலாக மூடப்பட்டதாக நினைக்கிறீர்களோ அதை திறக்கலாம்.

7. Start Menu / Quick Launch பாரிலிருந்து 'சைட்' திறக்கலாம்:

இணையதளங்களுக்கான 'டெஸ்க்டாப் ஷார்ட் கட்'கள் அனைத்து ப்ரெளசர்களிலும் உள்ளன. இது கூகுள் குரோமில் எளிமையாக உள்ளது.

ஏதாவது ஒரு தளத்தை திறந்து, அதில் 'பைல்' மெனுவிலிருந்து "Create application shortcut" என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அந்த தளத்தின் ஷார்ட் கட் டெஸ்க் டாப்பில் உட்கார்ந்து கொள்ளும்.

இப்படி பல வசதிகள் குரோமில் கொட்டிக் கிடக்கின்றன. இனி வெளிவர இருக்கும் குரோமின் புதிய Versions ப்ரெளசர் உலகில் நிச்சயம் ஏதும் பெரிதான புரட்சியை நிகழ்த்தும் என எதிர்பார்க்கின்றேன்.

கூகுள் குரோமை தரவிறக்க சுட்டியை அழுத்துங்கள்: தரவிறக்கம்





No comments:

Post a Comment

Related Posts with Thumbnails