மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய இயங்கு மென்பொருளான விண்டோஸ் 7 (Windows 7) ஜ உலகம் பூராகவும் வெளியிட்டது தெரிந்த ஒன்றே. சற்று தோல்வி வெளியீடான விஸ்ராக்கு (Vista) பின் விண்டோஸ் 7 அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குரிய பலனையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டுள்ளது.
இதில் நாம் பெருமைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், விண்டோஸ் 7யை உருவாக்கியதில் ஒரு தமிழ் கணிப்பொறியாளர் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் தெரியவந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 அதிகாரிகளில் 6 பேர் இந்தியர்களாம். சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவில் இந்த இந்தியர்கள் 6 பேருக்கும் மிக முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர் என்பவர்தான் சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். அந்தப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என்ற பதவியில் உள்ளார் அவர்.
சோமசேகர் தலைமையில் உலகம் முழுவதும் 4,000 பேர் பணிபுரிகிறார்கள்.
அண்மையில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான்.
சோமசேகர் அவர்களே, உங்கள் பணி மென் மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள்....
2 comments:
அது சரி. சோமசேகரோட ஈமெயில் முகவரி இருந்தா வெளியிடுங்க. எல்லாரும் அவருக்கு ஈமெயில் அனுப்பி 'ஐயையோ, ஆள விடுங்க சாமி'ன்னு ஓட வெச்சிடுவோம். 'நான் தான் நம்ம சோமுவுக்கு (அதான் சோமசேகர்!) ஒண்ணாம்ப்பு கிளாஸ் எடுத்தேன்'னு சென்னையில ஒரு வாத்தியார் பேட்டி கொடுக்க ரெடியாகிட்டாராமே?!
நண்பனே... என்னிடம் சோமசேகரோட ஈமெயில் முகவரி இல்லை. நல்ல வேளை,அந்தாளாவது (அதான் சோமசேகர்) தப்பிக்கட்டும்...
Post a Comment