ondragstart="return false" onselectstart="return false"

January 31, 2010

Avatar உருவாக்கப்பட்டது எப்படி??? (புகைப்படங்கள்)

உலகமெங்கும் வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் Avatar திரைப்படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவற்றை இங்கு பதிவின் மூலம் பகிர்கின்றேன்....
















Internet Explorer 6 க்கு Good Bye சொல்கின்றது கூகுள் இணையம்

கூகுள் இணையத்தின் இணையப் புரட்சியை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் இணையமானது நாளுக்கு நாள் புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. இதனால், பிரச்சனை என்னவெனில்.. கூகுள் இணையத்தின் வளர்ச்சிக்கேற்ப இணைய உலவிகளின் வசதிகளும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமே....

அந்த வகையில் எக்ஸ்புளோரர்-6 (Internet Explorer 6) தற்போது பிரச்சனையை எதிர்நோக்கின்றது. கூகுள் இணையத்தின் வளர்ச்சிக்கேற்ப எக்ஸ்புளோரர்-6 ஆல் ஈடுகொடுக்க முடியவில்லை. எக்ஸ்புளோரின் 7, 8 வெளியீடுகளைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் எக்ஸ்புளோரர் 7, 8 கூகுள் இணையக்கு தேவையான வசதிகளை கொண்டுள்ளது.

விசயத்திற்கு வருவோம்....கூகுள் இணையமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 பிரவுசருக்கு இந்த ஆண்டுக்குள் (2010) Good Bye சொல்கிறது. அதாவது, இனி வரும் காலங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-7, பயபொக்ஸ் 3.xx, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதற்கு மேம்பட்ட உலவிகள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் உலவிகளாக தொடரும்.

இதுகுறித்து கூகுள் இணையமானது ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டதாவது, இணைய உலவிகள் தொழில்நுட்பத்தின் சிறந்த அம்சங்களையும், செயல்பாட்டையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் கூகுள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதி நவீன இணைய உலவிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் அதாவது குறிப்பாக அதி விரைவு ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) உலவி மற்றும் HTML 5 ஆகியவை உள்ளடக்கிய அம்சங்களுக்கு ஊக்கமளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டுக்குள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 உலவியை கூகுள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய வெளியீடுகளையும் கூட படிப்படியாக கைவிடப்படும். இதனால் இந்த உலவிகளில் கூகுள் தளங்களை சரியாக பார்க்கவோ, 'இன்டர்ஆக்ட்' செய்வதோ முடியாது.

கூகுள் Documents மற்றும் கூகுள் இணையதளங்கள் 2010ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 (பழைய வெளியீடுக்கும் இது பொருந்தும்) உலவியில் சரிவர செயல்படாது.இந்த ஆண்டின் பிற் பகுதியில், கூகுள் மெயில் மற்றும் கூகுள் கலண்டர் ஆகியவற்றுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 உலவி செயல்படாது. அடுத்த வாரம் முதல் பழைய உலவிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் Documents மற்றும் கூகுள் இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகும். அதில், மேம்பட்ட வெர்சன்களுக்கு மாறிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும். மேலும் மார்ச் 1ம் தேதிக்கு முன்பும் ஒரு ரிமைன்டர் கொடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்- 7, பயபொக்ஸ் 3.xx, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதன் மேம்பட்ட உலவிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையில்லை. இந்த உலவிகள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் உலவிகளாக தொடர்ந்து செயல்படும்.




January 16, 2010

இசைப் பிரியர்களுக்காக வீவோ (VEVO) மியூசிக் இணையத் தளம்

இசைப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி...




யு–ட்யூப் (You Tube) இணையத் தள நிறுவனத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. யு–ட்யூப் இணையத் தள நிறுவனமும், உலகின் முன்னணி இசை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து வீவோ (VEVO) என்னும் பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த திட்டத்தை யு–ட்யூப் இணைய நிறுவனத்துடன் சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், யுனிவர்சல் மியூசிக் குரூப், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்துகின்றார்கள். இந்த நிறுவனங்கள் இத்திட்டத்திற்கென 30 கோடி டாலர் நிதியை வழங்கியுள்ளன.


தற்போது வீவோ இணைய தளத்தில் 5,191 கலைஞர்களுடைய 14,675 மியூசிக் வீடியோக்கள் உள்ளன. மேலும் 20 வெவ்வேறு வகையான இசை ஆல்பங்கள் இருக்கின்றன. வீவோ தளத்தைப் பயன்படுத்துபவர்கள் அவர்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை (Play List) உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் அதிகமான பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.
வீவோ இணையத் தளத்தை மேலும் விரிவாக்கும் திட்டத்தில் இந்த நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபடுகின்றன.


நம்மளுக்கு ஏதோ நல்ல செய்தி தான்... ஆனால், நம்மட சில தென் இந்தியா இசையமைப்பாளர்களுக்கு தான் இப்போ பிரச்சனை... வேறு நாட்டு பாடல்களை இனி இவர்கள் காப்பியடிக்க முடியாது... நாங்கள் இலகுவாக கண்டுபிடித்து விடுவோம் அல்லவா.... என்னக் கொடுமை சார் இது...

வீவோ இணையத் தள முகவரி




January 7, 2010

கூகிளின் Nexus-One Cellphone அறிமுகம்....




கூகுள் நிறுவனம் தனது சொந்தத் தயாரிப்பான Nexus One செல்போனை எப்போது அறிமுகப்படுத்தும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஓர் நற்செய்தி.

கூகுள் நிறுவனம் தனது நெக்ஸஸ் ஒன் (Nexus One) செல்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஜபோனுக்கு (iPhone) போட்டியாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.


நெக்ஸஸ் ஒன் ஆனது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை கொண்டுள்ளது...
  • 480 x 800 px, 3.7 in (94 mm)
    தொடுகை திரை (touch screen)
  • 5.0 மெகா பிக்சல் (mega pixel), 720 x 480 px கமரா
  • உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் (20 frames per second)
  • 3G, HSDPA/HSUPA, Bluetooth, WiFi, Micro-USB, A-GPS Quad band GSM, 850 900 1800 1900 MHz GPRS/EDGE
  • 512 MB DRAM உடன் 4 GB சேமிப்பு வசதி
  • நிறை: Battery உடன் 130 g (4.6 oz) , Battery இல்லாமல் 100 g (3.5 oz)
  • Battery பாவனை: 3.7 V 1400 mAh
    Rechargeable lithium-ion polymer battery,
    தொடர்ந்து Audio 20 hours வரையும்,
    Video 7 hours வரையும், தொடர்ந்து 10 hours (2G) அல்லது 7 hours (3G) வரையும் பயன்படுத்த முடியும்.


இந்த நெக்ஸஸ் ஒன்னில் இணைய வசதியைப் பற்றி சொன்னால் ஒரு கம்ப்யூட்டரில் இணைய தளம் மூலம் என்னென்ன வசதிகளெல்லாம் பெறக்கூடியதாக இருக்குமோ அத்தனையும் இந்த நெக்ஸஸ் ஒன்னில் மூலம் பெற முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.


இந்த நெக்ஸஸ் ஒன் செல்போனகள் மிகச் சிறிய தடிப்பு அதாவது பென்சிலை விட மெல்லிசாக உள்ளதாம்.

நெக்ஸஸ் ஒன் இரண்டு வித விலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் ஒரு வகை செல்போன் விலை 179 டாலர். இதில் பிரச்சனை என்னவெனில் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்த வேண்டும்.அதுமட்டுமல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வாங்க தான் வேண்டும். அதாவது இடையில் வேறு நிறுவனத்தின் நெட்வொர்க்கு மாறக்கூடாது.

  • இரண்டாவது வகை செல்போன் விலை 529 டாலர். இதில் எமக்கு விருப்பப்பட்ட நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளலாம்.



ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு இணையாக அறிகமுகப்படுத்தப்பட்ட கூகுளின் நெக்ஸஸ் ஒன், ஈடுகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....



January 5, 2010

உங்கள் பைல்களை GB இருந்து MB ஆக மாற்ற/சுருக்க வேண்டுமா?





இன்றைய அவசர உலகில் நாளைக்கு செய்வோம் என்று எந்தவொரு வேலையையும் ஆறுதலாக செய்ய முடியாத வகையில் எமது வாழ்க்கை போகின்றது. எந்தவொரு பொருளையும் எமது தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்த நவீன தொழில்நுட்பத் துறையானது வழிவகுக்கின்றது.

என்னடாப்பா?? இவன் என்ன சொல்லவாறான் என்று குழம்பாதீர்கள்..
சம்பந்தம் இருக்கு...

அந்த வகையில் தான்; பெரிய Capacity கொண்ட அதாவது GB வரிசையில் உள்ள பைல்களை (File- Data, Video) அல்லது மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. KGB Archiver மென்பொருளானது இலவச மென்பொருள் என்பது சந்தோசம் தரக்கூடிய விடயம்.


KGB Archiver ஆனது நம்ப முடியாத உயர் Compression Rate இல் GB இருந்து
MB ஆக மாற்றுகின்றது. இந்த மென்பொருளானது AES-256 Encryption எனும்
முறையைப் பயன்படுத்தி Encrypt செய்யப்படுகின்றது. இந்த மென்பொருளை
கணணியில் ஏற்ற (Install) 1.5GHz Clock Speed,256MB RAM கொண்ட கணணி
போதுமானது.


KGB Archiver ஜ பயன்படுத்தி Zip file ஆகவும், KGB file format ஆகவும் மாற்ற
முடியும். இங்கு .KGB file format ஆனது KGB Archiver இனுடைய சொந்த
file format ஆகும். மேலதிகமாக எமக்கு விரும்பிய Compression Algorithm யும்
தெரிவு செய்ய முடியும்.

Windows Vista மென்பொருளை (ஏறக்குறைய 3GB கொண்டது) 4MB ஆக
Compress பண்ணியது என்றால் நம்புவீர்களா??????????

KGB Archiver ஜ தரவிறக்க சுட்டியை அழுத்தவும்: தரவிறக்கு




Related Posts with Thumbnails